Description
தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இன்று வரை கண்ணகி தமிழர்களின் தாய்த் தெய்வமாக, கொற்றவையாகப் போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைப் பொக்கிஷம்.
சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் சொல்கிறது இந்தப் புத்தகம். சிலப்பதிகாரம் தமிழின் முக்கியமான நாடகக் காப்பியம் என்று அறியப்படுகிறது. இந்த ‘நாவல் வடிவில் சிலப்பதிகாரம்’ புத்தகத்தை வாசிக்கும்போது, ஏன் இது நாடகக் காப்பியமாகக் கொண்டாடப்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம். தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருந்த கலைச் செழிப்பை இந்த நூல் பதிவு செய்கிறது.
பல புத்தகங்களை ஆராய்ந்து, பல கட்டுரைகளை ஆழமாகப் படித்து இந்த நூலை எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன். இவர் எழுதிய ‘நாவல் வடிவில் மணிமேகலை’ நல்ல வரவேற்பைப் பெற்ற நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.