Description
வீடு வாங்கும்போது பெரும்பாலானவர்கள் முதலில் யோசிப்பது, வங்கிக் கடன் பற்றித்தான். ஆனால், நமக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, எவ்வளவு பணம் கிடைக்கும். என்ன என்ன விவரங்கள் கேட்பார்கள் என்பது பற்றியெல்லாம் நமக்குத் தெரிந்திருக்காது. வங்கிக்குள் நுழைந்தவுடன் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் புதியதாகத் தோன்றும். ஏன் இத்தனை விவரங்கள் கேட்கிறார்கள் என்ற மலைப்பு ஏற்படும். என்ன காரணம்? நமக்கு வங்கிக் கடன் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது என்பதால்தான்.
வீட்டுக்கடன் வாங்கத் தேவையான அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் அலசுகிறது இந்தப் புத்தகம், வீட்டைக் கட்டப் போகிறீர்களா அல்லது கட்டிய வீட்டைப் வாங்கப் போகிறீர்களா, வீட்டுக் கடனுக்கு எந்த வங்கியை அணுகுவது என்று எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும். வங்கியில் யாரை அணுகவேண்டும், அந்த வங்கிக்குள் நுழைவதற்கு முன்பு நாம் தெரிந்துகொள்ளவேண்டியவை என்ன, வீட்டுக் கடனுக்கு என்ன வட்டி, மாதாமாதம் செலுத்தப் போகும் தொகை என்ன, அதில் அசல் என்ன, கடனுக்கான வட்டி என்ன, நமக்கு எவ்வளவு கடன் தொகை கிடைக்கும், வீட்டுக் கடனில் பிரச்சினை என்றால் யாரை அணுகவேண்டும் என எல்லா விவரங்களையும் எளிமையாக விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் நா.கோபாலகிருஷ்ணன்.
வீடு வாங்க நினைப்பவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டியகையேடுஇது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.