Description
இதுவரை நாவல் கலையின் சாத்தியங்கள் என்று பொதுவாக அறியப்பட்ட அனைத்தையும் ‘விடம்பனம்’ உட்கொண்டிருக்கிறது. அதேசமயம் மேற்சொன்ன முன் முயற்சிகள் எல்லாவற்றையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் பிரதி இரக்கமற்று ஏளனம் செய்கிறது. அவற்றைப் பகடிக்குள்ளாக்குகிறது. நிலைபெற்றுவிட்ட வடிவத்தைக் குரூரமாக நையாண்டிக்குள்ளாக்குவதன் மூலம் கிடைக்கும் சுதந்திரத்தையே தனது வடிவமாகக் கொள்கிறது. இந்தச் சுதந்திரத்தை உள்ளடக்கத்தில் மேலும் காத்திரமானதாகக் கையாளுகிறது ‘விடம்பனம்’. நிலைபெற்ற மதிப்பீடுகளை, அழகியலை, வரலாற்றை, தனிமனிதச் சிந்தனைகளைப் பகடி செய்கிறது. கட்சி அரசியலை, கலை விசாரங்களை, சாதியப் பெருமிதங்களை, சீர்திருத்தப் போக்குகளை, பண்பாட்டுப் பெருமைகளைத் தலைகீழாகக் கவிழ்க்கிறது. ஒருவகையில் நம்மைச் சூழ இருக்கும் எல்லாவற்றின் மீதுமான விமர்சனமே ‘விடம்பனம்’. -சுகுமாரன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.