Description
மிக எச்சரிக்கையுடன் கையாளப்படவேண்டிய சட்டத்தை மீறுகிற கயவர்களும், போக்கிரிகளும் சம்மந்தப்பட்ட வழக்குகளில் நீதிவழங்கும் மிகப்பெரிய பொறுப்பிலுள்ள சக்ரவர்த்தியே குழம்பித் தவிக்கும் நிலையில் அத்தகைய வழக்குகளில் தீர்ப்பளிக்கும் பொறுப்பு, அக்பர் அமைச்சரவையில் இருந்த மிகத்திறமையான அமைச்சரான பீர்பால் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மனோதத்துவ ரீதியாகவும், துப்பறிந்தும் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அமுக்கிப் பிடிப்பதில் பீர்பால் எப்போதும் தவறியதேயில்லை! குற்றங்களை கண்டறிவதில் மரபு வழிப்படாத, வழக்கத்திற்குமீறிய வழிமுறைகளை அவர் பின்பற்றினாலும், அவருக்குத் தேவையான, விரும்பிய விளைவின் பயனையடைவதில் அவர் தோல்வியடைந்ததேயில்லை! ஒரு வழக்கில் ஒரு மரத்தை அவர் பிரதான சாட்சியாக ஆஜராக கட்டளையிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.