மௌனிகளாய் இருப்போருக்காக மாத்திரமின்றி எங்கள் கதைகளை திரிப்போருக்கு எதிராயும் என் புனைவின் குரலைத் தருகிற இப் பயணம் துப்பாக்கியின் குழல்மீதுதான் நிகழ்கிறது எதிரில் துப்பாக்கி ஏந்திய இராணுவம் கண்காணிக்கும் தருணங்களில்தான் கிளிநொச்சி நகரப் பூங்காவிலிருந்து ‘பயங்கரவாதி’ கதையின் முதல் பக்கங்களை எழுதத் துவங்கினேன். அதே நகரத்தில் அமர்ந்தபடியே இறுதிப் பக்கங்கள்வரை தினமும் எழுதி முடித்தேன். வாழ்வையும் எழுத்தையும் போராட்டமாக்க வேண்டும் என்பதை காலம் கற்றுத் தந்திருக்கிறது. கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் தேடப்படும் காலத்தில் எழுத்தை ஒரு சுவாசமாக மாத்திரமின்றி ஆயுதமாகவும் பற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கைகளில் தரப்பட்டிருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.