Description
தொல்லியல் புத்தகங்களைப் படிப்பது அவ்வளவு சுவையாக இருக்காது என்று யார் சொன்னார்கள்..?
இந்த நூலைப் படித்துப் பாருங்கள்…
இதுவரை வெளிவராத தேனி மாவட்ட தொல்லியல் தொடர்பான கையேட்டை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த நூல். ஆனால், நூலின் முதல் பகுதியைப் படித்து வரும்போதே தொல்லியல் என்ற அறிவியலின் எல்லாத் தளங்களையும் நம் கண்முன்னே விரித்துப்போடுகிறது.
என்னுடைய நண்பர் ஒருவர் என் வயதை ஒத்தவர், “ஆர்க்கியாலஜி என்றால் என்ன என்று சுருக்கமாகச் சொல்?” என்றார். எனக்குத் தெரியும்… ஆனால், சொல்லத் தொடங்கும்போதுதான், உடனடியாக என்னால் சொல்ல வராது என்ற வெறுமையை உணர்ந்தேன். இந்த நூல் முன்னதாகவே வந்திருந்தால், இதை அவர் கையில் கொடுத்துவிட்டு நான் தப்பியிருப்பேன்.
தேனி மாவட்டத்தில் காணக்கிடைக்கும் தொல்லியல் தரவுகளை ‘அகழ்வாராய்ச்சி’ எனத் தொடங்கி ‘தமிழின் எழுத்து மாற்றங்கள்’ வரையிலான தலைப்புகளில் வகைப்படுத்திக்கொண்டு நூலைத் திட்டமிட்டுக் கட்டமைத்துள்ளார், உமர் பாரூக்.
– செந்தீ நடராசன்
தலைவர், தொல்லியல் கழகம், தஞ்சை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.