இலக்கியம் என்கின்ற பலிபீடத்திற்கு மீண்டும் என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். நவீன உலக இலக்கியங்களைத் தொடர்ந்து படிப்பதன் ஊடாக தமிழில் புதிய கதை கூறுமுறைகள் சற்றுக் குறைவாகவே உள்ளதாக அறிகிறேன். உலக அளவில் புதிய கதை கூறல் முறைகளைப் பல்வேறு விதங்களில் விரித்தெடுத்துச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். எனக்கு அவற்றில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். “இலக்கியம் என்பது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளுதல் இல்லை. கற்பனை செய்தல், சொற்கள் வழியாக ஒரு மெய்யுலகை கற்பனை செய்து, அந்த மெய்யுலகிலே சென்று வாழ்ந்து, உண்மையாகவே வாழ்ந்த வாழ்க்கைக்கு நிகரான அனுபவங்களையும் புரிதல்களையும் அடைவதற்குப் பெயர்தான் இலக்கியம்” என்கின்ற எழுத்தாளர் ஜெயமோகனின் சொற்கள் எப்போதும் என்னை வழிநடத்துகின்றது.
வாசு முருகவேல்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.