Description
பரிந்தர குமார் கோஷ் – அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டவர். ஸ்ரீ அரவிந்தரின் இளைய சகோதரர். ஏறத்தாழ 12 ஆண்டுகாலம் அந்தமானில் கொடுமையான தீவாந்தர தண்டனைக்கு உள்ளானவர். அவரது சிறை அனுபவங்களே இந்த நூல்.
அந்தமான் சிறை என்பது ஒரு நரகம். தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பது, செக்கிழுப்பது போன்ற கொடுமைகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், தற்கொலை முயற்சிகள், கைதிகளின் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் என உயிர்ப்போராட்டத்தின் வலி இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாவர்க்கர் அந்தமான் சிறையிலிருந்த அதே காலகட்டத்தில் சிறையில் இருந்த பரிந்தர், தனது சக சிறைவாசிகளான உல்லாஸ்கர் தத்தாவின் மனப்பிறழ்வு, இந்துபூஷன் ராயின் தற்கொலை, ஜதீஷ் சந்திரபாலுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
வலி நிறைந்த சிறை வாழ்க்கையினை விவரிக்கும் பரிந்தரின் சிறப்பு, சோதனைகளைக் கூட ‘இதுவும் ஓர் அனுபவம்’ என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம். இந்த உணர்வு நம்மை அதிசயிக்க வைக்கிறது.
பரிந்தர் குமார் கோஷின் அனுபவங்களைச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் ஜனனி ரமேஷ்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.