அனைவருக்குமான அம்பேத்கர்
₹200 ₹190
- Author: ஜி.பி. ஹரிஷ்
- Translator: கே நல்லதம்பி
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு
- Publisher: அகநாழிகை
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
கல்வி, வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களைச் சந்தித்தது தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், சுதந்திர இந்தியாவின் அரசமைப்பை எழுதியது வரை இந்தியாவின் ஈடு இணையற்ற தலைவர் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் பயணம் என்பது கடினமான சூழல்களைக் கொண்டது. எத்தகைய லட்சிய நோக்கத்துக்காக அவர் தனது வாழ்வை அர்ப்பணித்தார் என்பது குறித்த விவாதங்கள் குறைவு. போற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே தவிர, அவருடைய லட்சிய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யாரும் தயாராக இல்லை.
சமூகம் குறித்த சிந்தனைகளைப் பண்படுத்தும் விழிப்புணர்வைத் தம் எழுத்து, உரைகளின் மூலம் தளராமல் அம்பேத்கர் ஏற்படுத்தினார். தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது ஆதிக்கத்தின், அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில், அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். எல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான லட்சியத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை.
காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவே, கம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாக அம்பேத்கர் கருதினார். அவரது மரணத்திற்குப் பிறகு எழுந்த சர்ச்சைகள், விவாதங்கள் பேசப்படவேயில்லை. இந்தக் கருத்துகளின் அடிப்படையில், அம்பேத்கர் அனைவருக்குமானவர் என்பதை அம்பேத்கர் பற்றி அறியப்படாத பல செயல்பாடுகள். எழுத்துகள், உரைகளின் மூலம் இந்நூல் விவரிக்கிறது. இந்த மறுபரிசீலனையை அம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையின் தொடக்கப் புள்ளியாகவே கொள்ள வேண்டும்.
– பொன். வாசுதேவன்
Be the first to review “அனைவருக்குமான அம்பேத்கர்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.