மரணத்தின் சத்தம் பேரொலியாகக் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எல்லோருடைய அம்மாக்களின் மரணங்களும் அவர்களுக்குள் இப்படித்தான் ஒலித்துக் கொண்டிருக்கக் கூடும். உயிரடங்கி குளிப்பாட்டிக் கிடத்தப்பட்டிருக்கும் அம்மாக்கள் பிள்ளைகளின் ஆழ்மனதோடு உரையாடும் ஓசை அது. அந்தக் குரல் இனிமேல் பிள்ளைகளின் வாழ்நாள் முழுவதும் அவர்களது காதுகளுக்குள் மாத்திரம் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அம்மாக்களுடன் வாழ்ந்த எவராலும் தமது வாழ்நாளில் அந்த அரவத்திலிருந்து தப்பித்துக் கொள்ளவே முடியாது.
அச்சொட்டாய், மிகத் துல்லியமாய் எல்லாமும் ஞாபகமில்லை என்றாலும், அம்மாவுடனான, அம்மா சம்பந்தப்பட்ட பல விடயங்கள் தொடர்ச்சியாக இப்போது நினைவுக்கு வருகின்றன. என்னதான் மறுத்தாலும் அம்மாதானே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறாள்?! அவளின்றி நானேது?!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.