அலை அரசி
₹150 ₹143
- Author: சாண்டில்யன்
- Category: வரலாற்று புனைகதை
- Sub Category: நாவல்
- Publisher: பாரதி பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2000
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
அளவுக்கு மிஞ்சி ஆபத்து விளைந்து, உயிரே போய் விடும்படியான பயங்கர நிலையிலும் முகத்தைச் சுளிக்காதவனும், புருவங்களைக் கூட அசைக்காதவனுமான தனது பேரன் இளவழுதி அந்த இரவில் அத்தனை பயங்கரமாகக் கூச்சலிட்டதால் நிலை கலங்கிப் போன முதியவன் பெருவழுதி, கூச்சல் வந்த திக்கை நோக்கி ஓடினாலும், இயற்கையாக அவனுக்கு உள்ளூர இருந்த பழைய உறுதியின் காரணமாக கப்பல் குறுக்குச் சட்டங்களில் தடுக்காமல் ஓரளவு திடமாகவே விரைந்து சென்றான். அந்தப் பெருமரக்கலத்தில் மருந்துக்குக்கூட காவலரோ மாலுமிகளோ இல்லாததால் யாரும் அவனைத் தடை செய்யாததாலும், மரக்கலத்தின் வடகோடியில் ஒரு சிறு அறை காணப்பட்டதாலும், அங்கிருந்துதான் தனது பேரன் அலறி இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான், முதியவனான பெருவழுதி. வேகமாகச் சென்று அந்த அறையை அடைந்து அதன் சிறு கதவைத் திறக்க முயன்றான். அவன் அழுத்தலுக்கோ, தோளை முட்டுக் கொடுத்து அவன் கதவை உடைக்க முயன்றதற்கோ, அந்தக் கதவு இடங்கொடுக்காததால், தனது மடியிலிருந்த வலையறுக்கும் கத்தியை எடுத்து அதன் தாள் துவாரத்தில் வைத்துத் திறக்கவே கதவு கீறிச்சென்று சத்தமிட்டுத் திறந்தபோது இளவழுதியின் இரண்டாவது கிறீச்சென்ற கூச்சலும் எழுந்து கதவின் ஒலியை ஓரளவு அடக்கிவிட்ட சமயத்தில் உள்ளே நுழைந்துவிட்ட முதியவன் அங்கிருந்த காட்சியைக் கண்டு ஸ்தம்பித்து நின்று விட்டான்.
அந்த அறையே அமைப்பில் விசித்திரமாயிருந்தது. அறையின் நாற்புறமும் கடினமான பலகைகள் அடிக்கப்பட்டிருந்தாலும் மேற்புறம் மட்டும் சிறிதளவு மூடப்படாமல் திறந்தே கிடந்ததால் வானை நன்றாகப் பார்க்க முடிந்தது. உள்ளேயிருந்த ஒரு சிறு அலங்காரக் கட்டிலில் இளவழுதி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த வண்ணம் படுத்துக்கிடந்தான். அழகுக்கே இலக்கணம் போன்ற அழகியொருத்தி இளவழுதியின் பக்கத்தில் உட்கார்ந்து கையில் இருந்த ஒரு தங்கக் கிண்ணத்திலிருந்து இளவழுதியின் வாயில் ஏதோ புகட்ட முயன்று அவன் வாயைத் திறக்காததால் மூக்கைப் பிடித்து அவன் வாயைத் திறக்கும்படி செய்ய முயன்று கொண்டிருந்தாள். அவன் வாயைத் திறக்க மறுத்து இருபுறமும் தலையை ஆட்டியதால் அந்த வாயைக் கிழிக்க மெல்லிய கத்தியை எடுத்த சற்று எட்ட நின்றிருந்த ஒரு அராபியன் “அரசி! அஞ்சாதே, அவன் வாயைக் கத்தியால் காதுவரை கிழித்து விடுகிறேன். அப்பொழுது பக்கவாட்டில் நீ அந்த மருந்தைப் புகட்டிவிடலாம்” என்று கூறிக் கொண்டு அலங்காரக் கட்டிலை நெருங்க ஒரு அடி எடுத்து வைத்தான்.
“நில் அப்படியே! அடுத்த அடி எடுத்து வைத்தால் பிணமாகி விடுவாய்” என்று வாயிற்படியில் நின்ற வண்ணமே பெருவழுதி அதட்டியதும் அந்த அறையிலிருந்த அந்தப் பெண்ணும் அராபியனும் ஒரே சமயத்தில் முதியவனை நோக்கித் திரும்பினாலும் இருவரும் அச்சத்தைச் சிறிதும் காட்டினார்கள் இல்லை. அந்த அறையிலிருந்த மூவரில் கட்டிலிலிருந்த அரசி என்று அழைக்கப்பட்டவள் எழுந்திருந்தாளேயொழிய இளவழுதி எழுந்திருக்காமல் கட்டிலில் உணர்ச்சி ஏதுமற்றுக் கிடந்ததைக் கண்ட முதியவன் “என் பேரனை என்ன செய்தீர்கள்?” என்று வினவினான்.
Be the first to review “அலை அரசி” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.