Description
தன் காலத்துப் படைப்புமொழியை அதன் உச்சத்திற்கு எடுத்துச்சென்ற படைப்பாளிகளில் லா.ச.ராமாமிர்தம் முக்கியமானவர். ‘அபிதா’ தன் காலத்து வாசகர்களின் மனத்தில் அழியாக் காவியமாக வீற்றிருக்கும் ஒரு படைப்பு. காதலின் துயரத்தையும் அது உருவாக்கும் மனப்பிறழ்வையும் இவ்வளவு அற்புதமாகச் சொல்லிவிட முடியுமா? கவித்துவம் ததும்பும் தனித்துவமான அவரது படைப்புமொழி உரைநடைக்குக் காப்பியத் தன்மையை அளிக்கிறது. வாழ்வுவரமா? சாபமா? வரம் எனில் யாருக்கு வரம்? சாபமெனில் யாருக்குச் சாபம்? -தேவிபாரதி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.