Description
இக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம்.
நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய நவீன ஜனநாயகப் பார்வையில் உருவாக்கிக் காட்டுகின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.