Description
காலம் தன் கருணையற்ற முரட்டுக் கரங்களால் எல்லாவற்றையும் வாரி அணைத்தபடி ஓடிக் கொண்டேயிருக்கிறது. யாருடைய அழுகைக்கும், சந்தோஷத்திற்கும், சிரிப்புக்கும், கதறலுக்கும், துரோகத்துக்கும், உதாசீனத்துக்கும், நட்புக்கும், பகைமைக்கும் அது காத்திருப்பதேயில்லை.
முத்தியம்மா
என் பால்ய நாட்களில் சொல்லிப் புரியவைக்க முடியாத இரவின் அமானுஷ்யத்தில், கனவுகளின் ஒழுங்கின்மையில், அது தரும் பயத்தில் இன்னுமின்னும் ஒட்டிப் படுத்திருந்த அம்மாவின் கதகதப்பான அணைப்பு மெல்ல என்னிலிருந்து விலகி, அவளின் கை தலைமாட்டிலிருக்கும் சின்ன ராந்தலின் திரியைத் தூண்டிவிடும். விரல்கள், தடி தடியாக தனக்குப் பக்கத்தில் போர்வைக்குள் ஒளித்து வைத்திருக்கும் புத்தகத்திலிருந்து ஒரு குழந்தையின் வருடலுக்காக தனித்திருக்கும் தவிப்புடன் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பிக்கும். அதன் பிறகு அம்மா எப்போது தூங்குவாள் என்று ஒருபோதும்
நான் அறிந்ததில்லை.
சொல்லும் எழுத்துமான என் அம்மா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.