ஆடல் பாடல் சினிமா
Rated 0 out of 5
( 0 reviews )₹560 ₹532
You save ₹28.00 (5%) with this book
- Author: கல்கி கிருஷ்ணமூர்த்தி
- Editor: ஸ்வர்ணவேல்
- Category: கலை, திரைப்படம் & புகைப்படம் எடுத்தல்
- Sub Category: விமர்சனம்
- Publisher: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
Hurray! This book is eligible for Free shipping.
Additional Information
- Pages: 512
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
“சகோதரியே! ஜாக்கிரதை! பணத்தாசை கொண்டு அவசர அவசரமாய் கான்ராக்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின்னால் கண்ணீர்விட்டு அழுதவர்கள் அநேகர் உண்டு. எந்த கம்பெனிக்காரர்கள் உன்னை நடிக்க அழைக்கிறார்கள், அவர்களுடைய யோக்யதை என்ன, எந்த ஸ்டூடியோவில் படம் எடுக்கிறார்கள், என்ன கதை, டைரக்டர் யார், உடன் நடிப்பவர்கள் யார், அவர்கள் மரியாதையுள்ளவர்களா என்னும் விவரங்களையெல்லாம் தெரிந்துகொண்டு, எல்லாம் திருப்திகரமாயிருந்தால், ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடு; கொஞ்சமாவது சந்தேகமிருந்தால், வேண்டாம்.’’
ஆனந்தவிகடன், 23.08.1936
வாரத்தில் மூன்று நான்கு நாள் மாலை நேரங்களை இந்தப் பகுதிக்கு விஷயங்களைத் தேடுவதற்காக நான் செலவு செய்வதில் குறைவு இல்லை. ஆனால் கிடைப்பது பெரும்பாலும் தலைவலிதான். தமிழ் டாக்கிகள் என்னமோ புதிது புதிதாய் வந்து கொண்டுதானிருக்கின்றன. கச்சேரிகளும் நடந்துகொண்டுதானிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் பற்றி எழுதுவதானால், விகடனின் பக்கங்களை வீணாக்குவதைத் தவிர பலன் ஒன்றுமிராது. அப்படி வீணாகும் இடத்தில் புதிது புதிதாய் எழுத முன்வரும் தமிழ் இளைஞர்கள் ஒருவருடைய கட்டுரையைப் போட்டால், அவராவது ஊக்கம் பெற்று மேலும் மேலும் நன்றாய் எழுத முன்வருவாரல்லவா? ஆகவே, இந்தப் பகுதியில் எழுதுவது பற்றி என் கொள்கை என்னவென்றால், ஏதாவது ஒரு வகையில் முக்கியமடைந்திருக்கும் டாக்கி, நாடகம் அல்லது கச்சேரியைப் பற்றித்தான் இங்கே பிரஸ்தாபிக்கலாம்; ஒரு புதுமை அல்லது ஒரு விசேஷ அம்சம் இருந்தால்தான் அதைப்பற்றி எழுத வேண்டும். வெறுங்குப்பை கூளங்களைப் பற்றியும் சாரமில்லாத விஷயங்களைப் பற்றியும் எழுதி இந்தப் பக்கங்களை வீணாக்கக் கூடாது என்பதே. இந்தக் கொள்கை உங்களுக்கும் பிடித்தமாயிருக்கும் என்றே நம்புகிறேன்.
ஆனந்த விகடன், 01.12.1935
Be the first to review “ஆடல் பாடல் சினிமா” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.