Description
சேப்பியன்ஸ்’ கடந்த காலத்தை ஆய்வு செய்தது.
‘ஹோமோ டியஸ்’ வருங்காலத்தை ஆய்வு செய்தது.
’21 பாடங்கள்’ நிகழ்காலத்தை ஆய்வு செய்கிறது.
* அணு ஆயுதப் போர், சூழலியல் சீர்கேடுகள், தொழில்நுட்பச் சீர்குலைவுகள் ஆகியவற்றிளிருது நம்மை நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
* போலிச் செய்திகள் என்ற கொள்ளைநோய் குறித்தும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்தும் நம்மால் என்ன செய்ய முடியும்?
* நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்?
இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற இது போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளின் ஊடாக ஒரு சாகசப் பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கி வைத்துள்ள உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.