Description
போன மாதம் புதுதில்லி ஜவஹர்லால் நேரு யூனிவர்சிடி மாணவர்கள் அறுபது பேரை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Maintenance of Internal Security Act – MISA) மிசாவில் கைது செய்து உள்ளே தள்ளிவிட்டதாக குல்கர்னி சொன்னது நினைவு வந்தது. நேரு பெயரில் பல்கலைக்கழகம் இருந்தாலும் மார்க்சிஸ்டுகளின் கூடாரமாம் அது. அந்த அறுபது மாணவர்களும் எமர்ஜென்சி காலத்தில் தைரியமாக காரல் மார்க்ஸின் கம்யூனிச சித்தாந்தப் புத்தகங்களைப் படிப்பதோடு எமர்ஜென்சியை எதிர்த்துப் பேசக் கூட்டம் சேர்க்க ஆராதனா படப் பாடல்களையும் பாடினார்களாம்.
அறுபது மார்க்சிஸ்டுகள் ஒன்று சேர்ந்து ஸப்னோம் கி ராணி என்று கோஷ்டியாகக் காதல் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தால், ஷர்மிளா டாகூர் மிரண்டு, காதைப் பொத்திக்கொண்டு ஓடியே போய்விடுவாளாக்கும். அதற்காக எஸ்.டி.பர்மனின் ‘காகே கோ ரோயே’ – ஏன் அழறே என்று துவங்கும் சங்கீத அழுகையை கோஷ்டி கானமாகப் பாட முடியுமா? துக்கப்பட வேண்டிய எதற்கும் துக்கப்படாத இந்த நாட்டின் தேசிய கீதமாகவே இசைக்க வேண்டிய பாடல் அதுவன்றோ.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.