1975 - எமர்ஜென்ஸி
நெருக்கடி நிலை பிரகடனம்
₹240 ₹228
- Author: ர.ராதாகிருஷ்ணன்
- Category: அரசியல், வரலாறு
- Sub Category: இந்திய அரசியல், கட்டுரை
- Publisher: சுவாசம் பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
இந்திராகாந்தியின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் அவரது எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது. எதனால் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது, அதனை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது, நெருக்கடி நிலையின் தாக்கங்கள் என்ன, அதனால் நாட்டின் அரசியலும் மக்களின் வாழ்வும் எத்தகைய விளைவுகளை எதிர்கொண்டன, அதன் எதிர்விளைவுகள் என்ன என இவை அனைத்தையும் விரிவான கண்ணோட்டத்தில் இப்புத்தகம் அலசுகிறது.
நெருக்கடி நிலைக் காலத்தை ‘அரசுக் கொடுங்கோன்மை’ என்று விமர்சனம் செய்தவர்களும் உண்டு. ‘தறிகெட்ட சுதந்திரத்திற்குப் போடப்பட்ட கடிவாளம்’ என்று சொன்னவர்களும் உண்டு. எமர்ஜென்ஸியை முழுமையாக ஆதரிக்கவும் செய்யாமல், கண்மூடித்தனமாக எதிர்க்கவும் செய்யாமல், எந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது, அதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் யாவை, நெருக்கடி நிலையை அறிவித்தவர்களும் அதனால் பாதிக்கப்பட்டவர்களும் என்ன செய்தனர் என வரலாற்றை உள்ளது உள்ளபடி திரும்பிப் பார்க்கும் முயற்சியே இது.
இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்கள், நெருக்கடி நிலைக் காலத்தை நேரில் கண்ட அனுபவத்தை அடையவேண்டும், இந்திய அரசியல் வரலாற்றில் இப்படிப்பட்ட அத்தியாயமும் உண்டு என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர். ராதாகிருஷ்ணன் இந்த நூலை ஆழமாகவும் விரிவாகவும் ஆதாரங்களோடும் எழுதி இருக்கிறார்.
Be the first to review “1975 – எமர்ஜென்ஸி” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.