1857ல் நடந்த இந்தியப் புரட்சி இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமானது. ஆங்கிலேயர்கள் இதைச் சிப்பாய்க் கலகம் என்று சிறுமைப்படுத்திச் சொன்னாலும், உண்மையில் இது கலகம் மட்டுமே அல்ல. ஒரு போருக்கான தொடக்கமே. முதல் இந்தியச் சுதந்திரப் போர் எனச் சொல்லப்படும் இது ஒரு போராகக் கனிந்ததா இல்லையா என்பது தனிக்கதை. ஆனால், சந்தேகமே இல்லாமல் இது ஒரு இந்தியப் புரட்சி.
இந்த நூலில் ஆசிரியர் ப.சரவணன், கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துவங்கி, சிப்பாய்களிடையே ஏற்பட்ட இந்தியப் புரட்சியின் பின்னணி, அது நடைபெற்ற விதம், அதன் விளைவுகள் என எல்லாவற்றையும் தெளிவாக விளக்குகிறார்.
மங்கள் பாண்டே, நானா சாகிப், பகதுர் ஷா உள்ளிட்ட பல வீரர்களைப் பற்றிய ஆழமான சித்திரங்கள் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்திய விடுதலைக்கான முதல் புரட்சியை அறிந்துகொள்ள இந்த நூல் ஒரு கையேடு
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.