Description
எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவான விதத்தை நினைவோட்ட உத்தியில் சொல்லும்போதே, சௌராஷ்டிர சமூகத்தைப் பற்றிய ஒரு விரிவான சித்திரத்தையும் எம்.வி.வி. தந்துவிடுகிறார். ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தை ஆழ அகலங்களுடன் சொல்லும் நாவலாக மட்டும் இது நின்றிருந்தால் காலவோட்டத்தில் காணாமல்போன நாவல்களில் ஒன்றாகக் கரைந்து போயிருக்கும். அப்படியின்றி, புறவாழ்வின் சவால்களுக்கு நடுவிலும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை நுட்பமாகவும் நேர்த்தியாகவும் குறிப்பாக யதார்த்தமாகவும் கொண்டிருப்பதன் காரணமாக இந்த நாவல் இன்றும் பொருட்படுத்தத்தக்கதாக அமைந்துள்ளது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.