Description
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்கிறான் திப்புவின் ஒற்றன் சொக்க கௌட. கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கிய வரலாற்றை ஆராய இந்தியாவிற்குப் பயணப்படும் எலினாரின் கணவனை அவளுடைய கதைகளில் ஒன்றாகக் கண்டுபிடிக்கிறார் கிரிஃபித் அப் ஒவைன். பிற மொழி நாவல்களைப் பார்த்து தமிழன் ஏங்கும் காலம் முடிந்துவிட்டது. தராசில் வைக்க ‘தாண்டவராயன் கதை’ இருக்கும்போது எந்த மொழியிடமும் சென்று மார்தட்டலாம். (ராஜன் குறை, ‘குமுதம் தீராநதி’) ‘தாண்டவராயன் கதை’ ஒரு அசாதாரணமான நூல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. (கா. மோகன்ராம், ‘கல்குதிரை’)
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.