Description
ஒவ்வொரு பேரரசும் உருவாகும் போதும் அதன் போராட்டங்களும் உழைப்பும் ஒரு சில காலகட்டத்திற்கே நிலைத்து நின்று பேர் சொல்கிறது.
சில பேரரசுகள் நூற்றாண்டைக் கடந்தும் நிலைத்து நின்று பின் ஒரு காலகட்டத்தில் சரிவை சந்திக்கின்றன.
அதுபோன்று ஒரு பேரரசுதான் பாண்டிய பேரரசு. சில நூற்றாண்டுகள் பேரரசாக உயர்ந்து, பிறகு வலிமை இல்லாத மன்னர்களால் பேரழிவை சந்திக்கின்றது. குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய பேரரசன் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக கட்டிக் காத்து விரிவுபடுத்திய பாண்டிய பேரரசு அவர் மகன்களால் சீரழிந்ததாக வரலாறு பேசுகிறது.
மாலிக்காபூரை எதிர்த்து தனியாளாக நின்று விக்கிரம பாண்டியன் போரை நடத்தினான். அவனை சரித்திர ஏடுகள் மறைத்துவிட்டன. அந்த விக்கிரமபாண்டியன் தான் இந்த கதையின் நாயகனாகவும் ஆலவாய் வல்லபனாகவும் என்னால் உருவாக்கப்பட்டிருக்கிறான்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.