நிலைத்த பொருளாதாரம்
₹180 ₹171
- Author: ஜே சி குமரப்பா
- Translator: அ கி வேங்கட சுப்பிரமணியன்
- Category: வணிகம் & பொருளாதாரம்
- Sub Category: ஆய்வு கட்டுரைகள்
- Publisher: தன்னறம் நூல்வெளி
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
“டாக்டர் குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப்பிரதியைக் கண்டவுடன் நான் அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல்பகுதியே என்னுடைய ஆர்வத்தை நிறைவு செய்ததுடன் என்னை சிறிதும் களைப்படையச் செய்யாமல், மாறாக நல்ல பயன்தந்து இறுதிவரை இட்டுச்சென்றது. ஆத்மாவை உடல் வெற்றிகொண்டு அதைத் திணறடித்து விடுமா? அல்லது அழிவில்லாத ஆத்மாவின் குறிக்கோளை அடையப் பயன்படுமாறு உடலின் ஒருசில தேவைகள் நல்லமுறையில் நிறைவு செய்யப்பட்டு விடுதலை பெற்று, அழியக்கூடிய அவ்வுடலின் மூலம் ஆத்மா தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வெற்றி பெறுமா? என்ற ஆதாரக்கேள்விகளை இதில் எதிர்கொள்கிறார் குமரப்பா…”
– காந்தி
1945ல் பம்பாய் செல்லும் இரயிலில் இருந்தபடி நிலைத்த பொருளாதாரம் நூலிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அண்ணல் காந்தி எழுதிய வார்த்தைகள் இவை. வணிகப்பொருளியலுக்கும் வாழ்வியலுக்கும் இடையேயான மனித மனதின் கருத்தாக்கங்களை மறுபரிசீலனை செய்யவைக்கும் நற்சிறந்த புத்தகமே நிலைத்த பொருளாதாரம். தற்சார்பு பொருளியல் என்று எல்லை சுருங்காமல், நுகர்வுபற்றியும் உற்பத்திபற்றியும் அதன்மீதான அறவுணர்வு பற்றியும் தெளிவுற எடுத்துரைக்கும் படைப்பாக்கம் இது
Be the first to review “நிலைத்த பொருளாதாரம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.