Description
காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல. தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பணி நிமித்தம் ஓர் உல்லாசப் பயணிபோல உள்நுழைகிறான் கதைசொல்லி. ஆனால் கண்ணெதிரே மரங்களும் காட்டுயிர்களும் தொல்குடிகளின் வாழ்வும் சிதைவது கண்டு பதற்றம் கொள்கிறான். மனசாட்சியின் நகங்கள் பிறாண்டுகின்றன. மழைக்காட்டின் மரணத்துக்கு சாட்சியாக வாழ நேரும் அவனுடைய துயரமும் அவலமும் இப்பிரதி முழுக்கக் காடோடியாய் அலைந்து திரிந்து அதை வாசகருக்கும் தொற்றவைக்கின்றன.
தமிழில் இதுவரை யாரும் தொடாத களம் காட்டழிப்பின் பின்னுள்ள நுண் அரசியலை ஒலியற்ற குரலில் சொல்வதன் மூலம் அழிக்கப்பட்ட காடுகளையும் அழிக்கப்படுகிற காடுகளையும் இந்நாவல் நம் கண்முன்னே விரிக்கிறது. கவிஞரும் சூழலியல் எழுத்தாளருமான நக்கீரனின் முதல் நாவல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.