Description
ஒரு மனிதன் எந்தப் புள்ளியில் தவிர்க்க முடியாத நபராகிறான் என்பதிலிருந்து எது அவனைப் புகழின் உச்சத்தில் கொண்டு உட்காரவைக்கிறது என்பது வரையிலான பயணம் மிக நீண்டது. கரடுமுரடானது. மிக நுணுக்கமான பல சூட்சுமங்களை உள்ளடக்கியது.
ஆனால் எதுவும் முடியாததல்ல. அசாத்தியமானதல்ல.
ஆனால் எனக்குரிய அங்கீகாரம், எனக்குத் தகுதியான அளவு புகழ் வந்து சேரவில்லை என்று ஏங்காதவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களானாலும் சரி. தகுதிக்குத் தக்க அங்கீகாரமும் புகழும் கண்டிப்பாக அடைய முடியும்.
வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை. இது சாதித்து முடித்தவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட பக்கங்கள். எனவே கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் பின்பற்றிப் பார்க்கலாம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.