Description
உயிர் வாழ்வதற்காக மட்டும் உணவு என்பதை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உணவுப் பழக்கம் வட்டாரம், பண்பாடு, விழா, சடங்கு, வழிபாடு, விரதம் எனப் பண்பாட்டுக் கூறுகளைச் சார்ந்தது. பழமையான பண்பாடும் வரலாறும் கொண்ட நாஞ்சில் நாட்டு உணவுப் பழக்கங்களை நாஞ்சில் நாடன் முதல் முறையாகத் தொகுத்திருக்கிறார். இது நீண்டகாலச் சேகரிப்பு. ஒரு படைப்பாளி இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது சவாலான விஷயம். இது சமையல் புத்தகம் அல்ல. ஆனால் சமையல் பக்குவத்தையும் சொல்கிறது. உணவின் மூலம் தாக்கம் செலுத்தும் பண்பாட்டுச் சிதறல்கள் இதில் உள்ளன. பானம், சோறு, பலகாரம், குழம்பு, பாயசம், மாமிச உணவு என வகுத்துக்கொண்டு, அவற்றின் பண்பாட்டு விஷயங்களைப் படைப்பாளிக்குரிய மொழிநடையில் சொல்கிறார். தமிழில் இந்த வகையில் இதுதான் முதல் ஆக்கம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.