Description
1995, செப்டம்பர். சூப்பர் நாவல் புத்தகத்துக்கான அட்டைப் படத்தை நண்பர் கே.வி. ஆனந்த் எடுத்துத் தந்துவிட்டார். அந்த அட்டைப் படத்துக்குப் பொருத்தமான தலைப்பை நாங்கள் கொடுத்தோம்.
‘பிடி வைத்த கத்தி’
சரித்திர காலத்தில் ஆரம்பித்து இன்றைய தினத்தில் முழுமைபெறும் பரபரப்பான கதை பிறந்தது.
கதை வெளிவந்தவுடன் அன்றைய தேதியில் பிரபலமாகிக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஒருவர் தொடர்பு கொண்டார். “இதை அப்படியே சினிமாவா எடுத்தா பிரமாதமாயிருக்கும். ஆனா, பட்ஜெட் கட்டுப்படியாகாது. எளிமையா மாத்தித் தருவீங்களா?” என்று கேட்டார்.
‘எளிமையான பட்ஜெட்டுக்கு வேறு கதைகள் இருக்க, இந்தக் கதையின் சிறகுகளை எதற்காக சிதைக்க வேண்டும்?’ என்று அவரிடம் எடுத்துச் சொல்லி மறுத்து விட்டோம்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்து திரு செல்வராகவன் இயக்கி வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தைப் பார்த்தபோது, ‘அட, நம்ம கதை சினிமாவா எடுக்கப்பட்டிருந்தா, இதுக்கு ஒரு சிறப்பான முன்னோடியா இருந்திருக்குமே!’ என்று தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.