Description
உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு குருதியில் ஒலிமதுவாய்ப் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் மூழ்குகிறேன், ஆடுகிறேன். சில கணம்தான். பறையிலிருந்து பிரவாகிக்கும் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் சூழ்கின்றன. எனக்குக் களிப்பூட்டிய பறை, இப்போது சினம் கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை, தோற்கருவிகளின் பொதுப் பெயர். ஆனால், அது சாதியுடன் பிணைக்கப்பட்டது எப்படி? இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடு இருக்குமா? பறையை இப்பிரபஞ்சத்தின் நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். உக்கிரம் கொண்டு அறைகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பரவச் செய்கிறது. அந்த அசுர இசையை உணர்ந்தபடியே, அடையாளக் கண்ணிகளை எரித்துக் குளிர் காய்ந்துகொண்டு, பறையின் வார்முடிச்சுகளில் உறைந்திருக்கும் இசையையும் சாதியையும் பிரித்தெடுப்பேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.