பிரசவத்திற்கு பின் பெண்கள் பலருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை (Post Natal Depression) கருவாகக் கொண்டு எழுதப்பட்ட மருத்துவ நாவல். தமிழ்நாட்டில் வேரூன்றும் இளைஞர் இயக்கம் ஒரு ஆயுதப்படையாக எழுச்சியுற்று அதிகாரங்களைக் கைப்பற்றும் ஒரு கற்பனைப் பின்னணியில் இந்த நாவலை அமைத்திருந்தேன். உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.