Description
ஊர் நாவிதன் பரமனுக்கு நான்கு மகள்கள். பட்டுப் பாவாடைகளை உடுத்திக் கொள்வதில் விருப்பம் கொண்டவளாக இருந்தவள் அவனுடைய அந்த நான்காவது மகள்தான். நான்காவது மகள் பரமனின் மற்ற மூன்று மகள்களைவிட அழகாக இருந்தாள். சிவப்பாக இருந்தாள். சூட்டிகையான பெண்ணாக இருந்தாள். படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தாள். தன் மற்ற மூன்று மகள்களைவிட அவளிடமே அதிகப் பிரியம் கொண்டவனாக இருந்தான் பரமன். அவளைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டான். அவளைப் பற்றிய குடிநாவிதன் ஒருவனுக்குச் சாத்தியமே இல்லாத பல கனவுகளைக் கண்டான். அவளைக் குறித்த நல்லதும் கெட்டதுமான பல கற்பனைகள் அவனுக்குத் தோன்றின. பரமனை ஓயாது அலைக்கழித்துக் கொண்டிருந்தவை அந்தக் கற்பனைகள்தாம். நூலிலிருந்து…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.