Description
வாழ்வின் மிகவும் புதிரான அனுபவங்களைப் பெற்ற முதற்களம். என் தலைமுறை முழுக்க எப்பொழுதுமே – ஒருவேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகவும் இருக்கக் கூடும் – கதை சொல்லக்கூடிய வலிமை தந்த வாழ்வின் தொடக்கம் இன்றுதான். பொழுதைப் போக்கும் ஆர்வமுள்ள வாசகர்களே நீங்கள் போய்விடுங்கள். இந்தக் கதையில் பொழுதா போகும், கிடையவே கிடையாது. வார்த்தை ஜாலங்களை அள்ளிவிசிறும் வித்தையா கற்றேன் – கனவுலகக் கதைசொல்ல? இல்லையந்த வாழ்வைத்தான் கண்டேனா, கேட்டேனா? பாம்பின் விசமே காலநீட்சியில் திரட்சியுற்று திரட்சியுற்று இரத்தினம் ஆகிறதாம். விசமென்றா அழைத்தீர் அதை. இதுவும் வலித்து வலித்து வாழ்ந்த மாந்தனின் கதை. வலியென்றா காண்பீர்? இல்லை விசமென்றா சொல்வீர்? நானறியேன். நீரே அறிவீர் அதை. கதை சொல்லிப் போவதே என் கடன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.