கோலப்பனின் அடவுகள்
₹299 ₹284
- Author: பிரபு தர்மராஜ்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: சிறுகதை
- Publisher: எதிர் வெளியீடு
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
பூமி உருவாவதற்கு முன்பே கோலப்பன் பிறந்து விட்டார். கோலப்பனின் பிறப்பை அண்டப் பெருவெடிப்பில் நிகழ்ந்த ஒரு பித்தவெடிப்பாகவே நாம் பாவிக்க வேண்டும். கோலப்பனின் அக்கா பிறப்பதற்கு முன்பாகவே அவளது மகன் பாப்பச்சன் பிறந்து கோலப்பனை தாய்மாமனாக்கினான் என்பதை இந்த வரலாறு எப்போதும் சொல்லாது. ஆதாமும் ஏவாளும் அதற்குப் பிற்பாடாகவே பிறந்தனர்.
“கோல் என்பது அதிகாரம், அப்பன் என்றால் சகலத்தையும் படைத்தவன்” என்பதை ஒரு முறை சொல்லிப் பாருங்கள். கோலப்பனின் தோற்றத்தில் உள்ள பிழைகள் மறைந்து தெளிவு பிறப்பதைக் காண்பீர்கள், கோ என்றால் அரசன், கோமாதா என்றால் பசு, கோயில் என்றால் அரசனின் இல்லம், கோஷ்டி என்றால் பஜனைக் குழு, கோணையன் என்றால் கோலப்பன் என்பதாய் ‘கோ’ என்று துவங்கும் வார்த்தைகளுடைய பட்டியலின் நீளமானது வெகு சுவாரசியமானவை.
எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கோலப்பன் இருப்பான். எல்லா கோலப்பன்களோடும் ஒரு பாப்பச்சன் இருப்பான். கடவுளும், சாத்தானும் என்ற கோட்பாட்டுக் கோப்பிராயங்களும் இதனுள்தான் அடங்கும். எல்லா மதநூல்களும் நன்மை தீமையென இதைத்தான் எடுத்துரைக்கின்றன. இங்கே கோலப்பனும், பாப்பச்சனும் கடவுளாகவும், சாத்தானாகவும் மாறி மாறி உருவெடுப்பதுதான் மனிதர்கள் பன்னெடுங்காலமாய் ஏறெடுக்கும் கோமாளித்தனங்களின் நீட்சி, இதற்கு நாகரீகம் என்றொரு தெண்டித்தனமான பெயர் வேறு வைக்கப்பட்டிருக்கிறது.
எது எங்கனமோ உங்களால் கடவுளையோ, சாத்தானையோ, கோலப்பனையோ, பாப்பச்சனையோ கண்களால் காணமுடியாது. மாறாக உணரமுடியும். அதையும் மீறி காண வேண்டுமென்றால் புகைப்படத்தில் இருக்கும் சர்வலோகாதிபரைக் காணுங்கள்! மோட்சம் கிட்டும்.
பாப்பச்சன்
(மருமோன் ஆஃப் கோலப்பன்)
Be the first to review “கோலப்பனின் அடவுகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.