பெருஞ்சேரல் இரும்பொறை
- Author: இரா.மலர்விழி
- Category: வரலாற்று புனைகதை
- Sub Category: நாவல்
- Publisher: சீதை பதிப்பகம்
Out of stock
Additional Information
- Edition: 1st (First)
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
பெருஞ்சேரல் இரும்பொறை (வரலாற்று நாவல் )
இவ்வரலாற்று புதினத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறை என்னும் சேர மன்னன் ஆவான். இவனுடைய செங்கோல் ஆட்சியையும் வீரத்தையும் பண்பு நலன்களையும் போற்றும் வகையில் இப்புதினம் அமைந்துள்ளது. இயற்கை வளமும் மாந்தர் வளமும் ஒருங்கே அமையப்பெற்று சேர நாட்டின் பெருமைகளைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வதன் மூலம் ஓர் ஆய்வு பெட்டகமாகவும் வரலாற்று களஞ்சியமாகவும் இப்புதினம் திகழ்கிறது.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் ‘தகடூர் எறிந்த’ என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர், துயில் கலையும் வரை, கவரி வீசினான் இவன், என்று புகழப்படுகிறான்.
கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.
இவனை
குட்டுவன் இரும்பொறை
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
பூழியர் மெய்ம்மறை
கொடித்தேர்ப் பொறையன்
இயல்தேர்ப் பொருநன்
கோதை மார்பன்
சேரமான் கோக்கோதை மார்பன் வேறு அரசன்
ஆகிய வேறு பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்.
Be the first to review “பெருஞ்சேரல் இரும்பொறை” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.