Description
தகப்பன் கொடி வைத்திருப்பது நிலம் குறித்ததொரு கனவு. நாடு பிடிக்கின்ற, அதிகாரம் செலுத்துகின்ற பேராசைக் கனவல்ல அது. வேட்டையாடியும் பயிர் வளர்த்தும் வாழ்கிற தொல்குடி மனிதனின் உரிமைக் கனவு. எளிமையும் பருண்மை கொண்டதுமான ஒரு வாழ்க்கையின் ஆதாரம். அந்தக் கனவுக்குள்ளேதான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது; குடும்பம் இருக்கிறது; மகிழ்ச்சி, கூத்து, கொண்டாட்டம் எல்லாமே இருக்கின்றன. இப்புதினத்தின் நாயகன் அம்மாசி, சொந்த நிலம் குறித்து அப்படியொரு கனவையே காண்கிறான். ஆனால், எண்ணத்திற்கும் தடை விதிக்கும் இச்சமூகம் அவன் கனவைச் சிதைக்கிறது. அம்மாசி தன் ஊரையும் உறவுகளையும் இழக்கிறான், மனைவியைப் பறிகொடுக்கிறான், தான் நேசிக்கும் கூத்தைக் கைவிடுகிறான். எதை இழந்தாலும் சொந்த நிலம் மீதான நாட்டத்தை அவன் கைவிடுவதேயில்லை. இறுதியில் அந்தக் கனவு, அவன் நடத்தும் நிலவுரிமைப் போராக மாறுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.