Description
ஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை. எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள் பன்னிருவரின் படைப்புகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும் பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஆய்வுசெய்த ‘புனைவு என்னும் புதிர்’ பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, 90களுக்குப் பிறகு வந்த முக்கியமான படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் 12 கதைகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு கதையாக ஆராய்கிறது இந்நூல்.
கட்டுரைகளில் விவாதிக்கப்படும் கதைகள், ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.