Description
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவன் கருத்தில் கொள்கிறான். வேறு எதையுமே அவன் பொருட்படுத்தவில்லை. ஏறிட்டுப் பார்க்கவும் அவன் விரும்பவில்லை. விஸ்வரூபம் கொண்ட அவனுடைய விழைவு ஒருநாளும் திரும்பப் பெற முடியாத ஓர் உயிரைப் பலி வாங்கிய பிறகே அடங்கி ஓய்கிறது. துயர் பொருந்திய அக்கணத்தில்தான் யயாதியுடைய அறிவுக் கண்கள் திறக்கின்றன. அடங்காத விழைவுக்கும் அறிவுக்கும் இடையிலான இணைப்புகளிலும் முரண்களிலும் பேருருக்
கொண்டு நிற்கிறான் யயாதி.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.