எர்ரி அபிராத்து
நனவிலி மெஞ்ஞானக் காதை
Rated 0 out of 5
( 0 reviews )₹800 ₹760
You save ₹40.00 (5%) with this book
- Author: கோணங்கி
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
Hurray! This book is eligible for Free shipping.
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Pages: 864
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788177203530
Description
துரட்டி ஏந்திய மேய்ப்பவரின் உள்ளங்கைகளில் ஒட்டி உருண்டு, வட்டச் சுவடியாய் உருமாறும் புதினம் இது. காகிதங்களில் கிறுக்கலாய்க் கோடவிழ்த்து வந்த சற்பாத்திரங்களைக் கரும்பிக் கரும்பி வெளியேற்றிவிட்டு, மெல்ல அசைந்து, மஞ்சள் முள்ளுகளால் குத்தி எழுதி வரும் இந்த முள்ளெலிகள், கதாருதுக்களைக் கீச்சுக் குரலிடும் உவர் தரவைக் கதைகளையும் வாசிப்பீரே…
நீவீர் கோபியாது, உற்றுணருமாறு அத்தியந்தத் தாழ்மையாய்க் கோலியாத்தின் மணற்கண் சுமந்த துயர இமைப்புகளையும் ‘ஈரேழ் அபிராத்தின்’ பாசி அடைந்த சீதள ஓலைக் குருத்துகளில் கோணங்கி எழுதியுள்ளார். நீங்கள் இதை வாங்கி நாதகிருத்தியங்களோடு ஆராதித்து, பரோக் கலை உலக விருத்தாந்தங்களையும் காது வைத்துக் கேட்கவேண்டும். மணற்கண்ணின் பரிபாஷைகளில் இமை பிரித்து, லிபிகளைத் தைத்தவாறு, ஏடவிழ்த்து ரெப்பை மூடி, மொழி இருட்டில் மறையுருவாய்க் கதைத் திரட்டின் முதுநீர்ப் பாதைகளில் நீந்தி ‘எர்ரி அபிராத்து’ நவீனம் அடைவீரே…
நோவாவின் இருட்டுப் படகில் அடிக்கடலின் சமவெளிக்குள் ஊடுருவிச் சென்று, இந்த ஒவ்வொரு புத்தக இரு வெளிகளை எர்ரித் துணிகளால் மடித்து, உலோக உப்புகள் தடவி நீரில் போட்டால், நூல் ரெட்டையாகிவிடும். ஈரேழ் அபிராத்தின் இந்த மடக்குகள் எல்லாம் வனமந்திரக் கதா நூதன வடிவம். வேறொருவர் வாசிப்பில் ஊனுடல் மொழியாய், எலும்புச் சட்டகமாய் வரிப்படும் சொல் ஓர் உயிரி.
முதுநீரில் கரையாமல் அது நீந்தியபடி இருப்பதற்கு, வார்த்தைகளின் ஆவி சொல்ல ஆரம்பிக்கும் போதே எழுதும் உயிரி தோன்றி, இயங்கியலாகி அலைகிறது இந்தக் கதைகளின் விதிகளுக்குள்.
Be the first to review “எர்ரி அபிராத்து” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.