மால்பரோவில் இருந்து வெளியேறினாலும் பினாங்குக் காட்டுக்குத்தான் கொண்டுபோவார்கள். சாப்பிடச் சொன்னாள் கடிமிளை. ‘பழையதாகிவிட்டது இவற்றை என்னால் உண்ண முடியாது’ என்றான். சிறையில் இருப்பவர் சினமடையவோ நடுங்கவோ கூடாது. நான் விரும்புவது காற்றை. இந்த ஜன்னலில் நல்ல காற்று வரும். இந்த மால்பரோ ஜன்னலில் எல்லா ஒலிகளுக்குள்ளும் பட்சிகளின் சிறு இதயம் இருக்கிறது. எல்லா உயிர்நிலைகளுக்குள்ளும் காத்திருக்கும் மரணம். இதுவே என்னை விடுதலைக்கு அழைத்து செல்லும். நான் கற்பாறையாக இருக்கிறேன். பற்பல வடிவங்களாக இக்கல் வடிவடைந்து இருக்கிறது. சொற்களும் மனமும் திணைகளில் பொதிந்திருக்கிறது. ஆனால், அங்கு என்னால் போக முடியாது.
– யதார்த்த வாதமும் கவித்துவமும் கூடிவரும் கோணங்கியின் புதிய சொல்மொழியில் புதிய நாவல் ‘ நீர்வளரி’ யிலிருந்து..
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.