Description
கிடைத்திருக்கும் தரவுகளின்படி பாலாதித்யகுப்தரின் காலம் (பொ.யு. ஐந்தாம் நூற்றாண்டு) தொடங்கி முஹம்மது பக்தியார் கில்ஜியால் (பொ.யு.12-ம் நூற்றாண்டு) அழிக்கப்பட்ட காலம் வரையிலுமாக இருந்த நாலந்தா மடாலயம் – பல்கலைக்கழகம் பற்றிய அற்புதமான ஆவண நூல். பௌத்த நூல்கள், யுவான் சுவாங், ஐ-சிங் முதலான சீனப் பயணிகள் எழுதிய குறிப்புகள், ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் எழுதியவை, இஸ்லாமிய ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாலந்தா எனும் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷத்தை ஒவ்வொரு செங்கலாக அடுக்கி, நம் கண்முன் எழுப்பிக்காட்டியிருக்கிறார் திரு. நீலகண்ட சாஸ்திரி. நாலந்தாவில் எந்தெந்த மன்னர்களின் காலகட்டத்தில் என்னென்ன கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன? தரைத்தளம் தொடங்கி உச்சிக்கோபுரக் கட்டுமானங்கள்வரை என்னவெல்லாம் இருந்தன? நாலந்தாவில் பௌத்த துறவிகள், சீடர்கள், மாணவர்களின் வாழ்க்கை என்னவாக இருந்தது? என்னென்ன பாடங்கள் கற்றுத் தரப்பட்டன? எந்தெந்த அயல் நாட்டிலிருந்தெல்லாம் நாலந்தாவைத் தேடி வந்திருக்கிறார்கள் என்பவை பற்றியெல்லாம் வெறும் தரவுகளைக்கொண்ட ஆவணமாக அல்லாமல், அருமையாக, கதை வடிவில் வெகு சுவாரசியமாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். தமிழகப் பள்ளி கல்லூரிகளில் துணைப்பாடமாக வைக்கப்படவேண்டிய நூல். பொது வாசகர்களுக்கு அற்புதமான ஒரு வரலாற்றுச் சுற்றுலாவாக அமையக்கூடிய கையடக்கமான கையேடு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.