Description
தமிழ் நீதி நூல்களில் முக்கியமானது நாலடியார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நீதிகளை எடுத்துக்கூறும் முறையில் மட்டுமல்லாது கட்டமைப்பிலும் சொல் நயத்திலும் திருக்குறளோடு நாலடியாரை ஒப்பிடமுடியும். குறளுக்கு இரண்டு அடி என்றால் நாலடியாருக்கு நான்கு. அறம், பொருள், இன்பம் எனும் முப்பிரிவுகளில் நாம் கடைப்பிடிக்கவேண்டிய அற விழுமியங்களை நாலடியார் தெளிவுற எடுத்துச் சொல்கிறது. நம் வாழ்க்கைமுறையைச் செம்மைப்படுத்த உதவும் சிந்தனைகளை நயமான உவமானங்கள் மூலம் எடுத்து வைக்கும் நாலடியாரை எடுக்க, எடுக்க வளர்ந்துகொண்டே போகும் தமிழர்களின் அரியபொக்கிஷம் என்றே அழைக்கவேண்டும். இன்றைய தலைமுறையின் தேவைக்கு ஏற்ப எளிமையான, சுவையான உரைநடையில் நாலடியாரை அறிமுகப்படுத்துகிறார் ஜனனி ரமேஷ். தமிழ்ச்சுவையை நாடுவோர் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரும் விருந்து.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.