ஒரு புளியமரத்தின் கதை பொன்விழா பதிப்பு
₹650 ₹618
- Author: சுந்தர ராமசாமி
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல்
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
Additional Information
Description
சுந்தர ராமசாமி, தமக்கு இடங்கள், காலங்கள், மனிதர்கள், மனித உறவுகள் மீது அக்கறை உண்டு என்றும் அதன் விளைவே தமது நாவல்கள் என்றும் குறிப்பிடுகிறார். ‘ஒரு புளியமரத்தின் கதை’ இடமும் காலமும் சார்ந்த படைப்பு, ‘ஜே.ஜே.ஃ சில குறிப்புகள்’ காலமும் கருத்தும் சார்ந்த படைப்பு, ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ மனித உறவுகளைச் சார்ந்த படைப்பு என்று சுட்டிக்காட்டியுமிருக்கிறார். இடத்தையும் காலத்தையும் சார்ந்த படைப்பாக சுந்தர ராமசாமியால் சொல்லப்படும் ‘ஒரு புளியமரத்தின் கதை’ உண்மையில் அவரது பிற்கால நாவல்களுக்கு முன்னோடியானது. இடமும் காலமும் மட்டுமல்ல மனிதர்களும் உறவுகளும் கருத்துக்களும் இந்த முதல் நாவலிலேயே விரிவாகப் பேசப்படுகிறது என்பதை இன்றைய மறுவாசிப்பில் திட்பமாக உணர முடிகிறது. புளியமரத்தின் நிழலில் துளிர்விட்ட முளைகள்தான் பிந்திய நாவல்களாக வேரூன்றியிருக்கின்றன. அந்தவகையில் ‘ஒரு புளியமரத்தின் கதை’ சுந்தர ராமசாமியின் நாவல் கலைக்கு முன்னோடி. அதே சமயம் இன்றைய நாவல்களுக்கு நிகரற்ற சவால். எழுதப்பட்டு அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்பும் புதிய போக்குகள் கடந்து சென்ற பின்பும், வடிவிலும் மொழியிலும் பொருளிலும் புதுமை குன்றாமல் வாசிப்பின்பம் குலையாமல் நிலைபெற்று நிற்கிறது.
Be the first to review “ஒரு புளியமரத்தின் கதை பொன்விழா பதிப்பு” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.