Description
ஆயிரக்கணக்கான பார்வையாளர்களையும் 22 ஆட்டக்காரர்களையும் கொண்ட கால்பந்து விளையாட்டில் எல்லோருடைய பார்வையும் கால்பந்தை நோக்கியே இருக்கும். தொலைக்காட்சி பார்வையாளர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இந்த கால்பந்தை போன்றது தமிழில் வரும் கவிதைத் தொகுப்பும். ஆனால், இங்கே பார்வையாளர்கள் கவிதை எழுதிக்கொண்டு இருப்பவர்களாவும் எழுதப் போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இது தமிழில் தொடர்ந்து நடந்தேறிக் கொண்டு இருக்கிறது.கவியரசு, எந்தக் கேள்விகளையும் பதிலையும் வைத்துக் கொள்ளாமல் கவிதையென்னும் கால்பந்தை உருட்டி விளையாண்டு பார்த்திருக்குகிறார். கோல் போடுவதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் உருட்டி விளையாடுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது. சில இடங்களில் லாவகமாக சில இடங்களில் எளிமையாக தொட்டு இருக்கிறார். கவிதை என்னும் கால்பந்தினை எப்படி அணுகுவது என்று தெரிந்து கொண்டாலே போதுமானது என்று தன்னைத் தானே சமாதானப்படுத்தும் மனப்போக்கு அவரின் கவிதைகளை வாசிக்கும் போது தெரிகிறது.
– கவிஞர்.வேல்கண்ணன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.