Description
மாபெரும் தலைவன் மால்கம் X அவர்களை இசுலாமியன், வெள்ளையரை வெறுப்பவன், கோபக்காரன், வன்முறையாளன் என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்களும், அறிவுலகமும் அவனை தூற்றிக் கொண்டிருந்தன. அவனைக் கண்டு அதிகார வர்க்கம் பயந்தது. அவனைப் பற்றி பேசினால், சிந்தித்தால், தர்ம சங்கடமான பல கேள்விகள் எழுவதால், அறிவுலகம் அவனை இருட்டடிப்புச் செய்தது. முகஸ்துதி செய்து, முதுகு சொறிந்து வாழும் அரசியல்வாதிகள் கூட்டம் அவனது நேர்மையையும், துணிவையும் கண்டு அஞ்சினர்; எனவே அவனை தவிர்த்தனர். இனவெறியால், ஏற்றத்தாழ்வால், வன்முறையால், வரம்புகடந்த அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுக் கிடந்த அமெரிக்கக் கறுப்பின மக்கள் மட்டும் பகலவனாய்ப் பார்த்தனர் அவனை.
மால்கம் X மனித வரலற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த, புகழ்மிக்க உலகத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். அந்த அற்புதத் தலைவனின் வளர்ச்சியை, அவனது தலைமைத்துவத் தத்துவங்களை, தன்னிகரற்ற தனித்துவங்களை எல்லாம் கதைபோலச் சொல்லி கவர்ந்திழுக்கும் “மால்கம் X: அறிமுகமும் அரசியலும்” எனும் இந்நூல் தவிர்க்கப்பட முடியாதது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.