விட்டல்ராவின் உரையாடல்களில் உள்ளம் பறிகொடுத்து அவரிடமிருந்து கற்றதையும் பெற்றதையும் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார் பாவண்ணன். இன்றைக்கு பெங்களூரில் தனித்து வாழும் விட்டல்ராவ் தனிமையில் வாழவில்லை. வாழ்ந்த இடங்களையும் சந்தித்த மனிதர்களையும் சதாகாலமும் சிலாகித்து வாழும் விட்டல்ராவின் நினைவுகளும் ரசனைகளும் பாவண்ணனின் எழுத்தில் முடிவுறா நாவல் ஒன்றை படிக்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. ’விட்டல்ராவும் நானும் உரையாடிக்கொண்டிருந்தோம்’ என்ற நூல் வெளிவந்து ஓராண்டுகூட ஆகவில்லை. இந்த இடைவெளியில் விட்டல்ராவுடன் பாவண்ணன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பே ’விட்டல்ராவின் உரையாடல்கள்’ என்ற இந்த நூல். கலை இலக்கிய வாழ்வில் விட்டல்ராவுக்கு சலிப்பும் இல்லை; சங்கடமும் இல்லை. வற்றாத ஜீவநதியின் நீர்மை இவரது வாழ்வும் படைப்பும் என்று சொல்லத்தோன்றுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.