Description
காதல், சாதி, அதிகாரம், பொருள், உறவுகள், சந்தை, அரசு, தொன்மையென ஒரு பன்றியை போல உழன்றுகொண்டிருந்தேன். உழலுவது இங்கு யாருக்கும் புதிதல்ல. ஆனால், பன்றிகளுக்காக இங்கு பூக்கள் எதுவும் பூக்காமல் இல்லையே.
வாழ்வு எப்பொழுதும் இரண்டு இரண்டிற்குமான எதிர் எதிர் அமைவுடையதென எண்ணி இருந்தேன். ஆனால், அது அப்படியல்ல. எதுவும் எதனோடும் இணங்கி புன்னகைக்கும் மனமுடையதுதான். நாம் தான் அதை திரையிட்டு மறைக்கிறோமென்பதை இந்த எட்டு ஆண்டுகள் எனக்கு உணர்த்தியிருக்கிறது. இது சுய ஒப்புதல் என எண்ணினாலும் சரிதான்.
இந்த புத்தகம் முகாமிற்கு திரும்பும் யானையை போல என்னை மெல்ல நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. என் முதுகிற்கு பின்னால் எப்பொழுதும் ஒரு கரம் தட்டிக்கொண்டே இருக்கும். அது கவிஞர் கரிகாலன் சாருடையது. என் வாழ்வில் சொற்களால் நிரப்பமுடியாதவர். மனிதர்களை குற்றங்களோடு ஏற்கும் மனமுடையவர். நான் எப்பொழுதும் அவர் முன் குற்றமுடையவனாகவே இருக்க விரும்புகிறேன்.
இந்த புத்தகம் வெளிவர துணை நின்ற வேரல் புக்ஸ் லார்க் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றியும் அன்பும்.
சர்க்கரைக்கடலை அடுத்து சிறு அலையென எழுந்து வருகிறது இந்த எழுமின் அன்பே. எப்பொழுதும் காதல் கொள்வோம் வாருங்கள்.
என்றும்
தீரா அன்புடன்
வெ. மாதவன் அதிகன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.