Description
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாடமும் கதையில் இருக்கிறது. பாடம் நடத்துபவர்கள் ஆசிரியர்கள் அல்லர். வேறு யார்? குருவியும் மற்றொரு பூனையும்! எலி பிடித்து வந்து பிறகு என்னோடு விளையாடு என்று வேண்டும் குருவியும், செல்லப் பிராணியாக இருப்பதற்காக நம் இயல்பை மறந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் ரோமியும் சீசரின் பாதையை மாற்றுகின்றன. வாழ்க்கைப் பாடத்தைப் புரிய வைக்கும் ஆசிரியர்கள்…
மதிவதனியின் உலகம் குழந்தைகளின் உலகம். அவருடைய நாடகங்களில் (குழவிப் பூங்கா) குழந்தைகளே மையப் பாத்திரங்கள். அவருடைய கட்டுரைத் தொகுப்பு (ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு) குழந்தை உளவியல் சார்ந்தது. வாக்குத் தவறேல் எல்லோருக்குமானதுதான். இருப்பினும் கதையை வாசித்தது முதல் இக் கதையைக் குழந்தைகளுக்காக வடிவமைப்பது குறித்ததே யோசிக்கிறேன்.
குழந்தைகளுக்ககாக எழுதும் மதிவதனியின் எழுத்ததாற்றல் தமிழ் உலகில் முத்திரை பதிக்கும் என உறுதியாக நம்புகிறேன்.
ச. மாடசாமி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.