Description
வலி நிவாரணி
மனித வாழ்வில் பரவிக் கிடக்கும் பலவகையான உணர்வுகளைக் கையாள்வதிலேயே நம் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது. சமயத்தில் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக் களைத்து ஆசுவாசமாவதற்குள் அடுத்த ஒன்று நம் கவனத்தையும் நேரத்தையும் கேட்டு நிற்கிறது. தொடர்புகளற்ற நேரத்தில் யாரையோ தேடிக்கொண்டும், கூட்டங்களில் தனிமையை யாசித்தும் திரியும் இந்த மனதைக் கையாள்வதென்பதே ஒரு கலைதான். அப்படியான யுக்தியை தகுந்த இடத்தில் பயன்படுத்துவதாலேயே கவிஞர்கள் தனித்துவமானவர்களாக இருக்கின்றனர். மேலும் மனநல மருத்துவர்களைப் போல கவிதைகளால் நிவாரணம் தருகிறார்கள். வலியையோ மகிழ்வையோ எழுத்துகளில் இறக்கி வைத்துவிட்டு நதிபோல ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கவிஞர் நீரை மகேந்திரனும் அப்படித்தான் தனது கவிதை மனத்தால் நம்மை அவரின் சொற்களோடு இணையச் செய்கிறார். ஒவ்வொரு கவிதையை அவர் முடிக்கும்போதும் நமக்குள் ஏதோ ஒன்று நிகழத் தொடங்குகிறது. அவரின் ரகசியங்களில் இருந்து நம் மனதிற்கான திறவு இயல்பாகவே கிடைக்கிறது.
பதிப்பாசிரியர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.