உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது. குழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தாம் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருப்பதுதான். அதனால் கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது. எந்தத் தயக்கமும் இன்றி மாணவர்கள் கேள்விகளைக் கேட்கவும் அவற்றுக்கான பதில்களைப் பெறவும் ஒருவர் தேவைப்படுகிறார். அதைத்தான் மாயாபஜாரில் வெளிவரும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதி பூர்த்தி செய்திருக்கிறது. அதற்கு மாணவர்களிடமிருந்து வரும் கேள்விகளே சாட்சி.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.