பாரதி ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று சொன்னது மிகப் பொருத்தமான வருணனை. ஆனால் தற்கால அவசரத்தில் இருக்கும் எஸ்எம்எஸ்-‘லாஸ்ட் டச் வித் டமில் யார்’-இளைஞர்களின் நெஞ்சை அள்ளச் சிலப்பதிகாரத்தின் கதையையும், அழகான அமைப்பையும், உவமைகளையும் எளிய முறையில் சொல்ல வேண்டியது தேவை என்று எண்ணினேன். அதன் விளைவுதான் இந்நூல். சிலப்பதிகாரத்தைப் படித்தபோது எனக்கு மிஞ்சிய ஒரு மகா வியப்பு. அதன் காலத்தைக் கடந்த நவீனம், Contemporaneity இன்றும் புதிதாக இருக்கும் கதையும் கதை சொல்லும் முறையும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால் இந்த எளிய உரையின் பயன் கிட்டியதாகச் சொல்வேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.