Description
மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உடலைக் கடந்து அவர்களுடைய தன்னிலையை, உளவியலை, சமூகம், உறவு, சட்டம், ஊடகங்கள் சார்ந்து எழும் பிரச்சினைகளை, அவர்களுடைய உலகில் கடவுளுக்கும் மதத்துக்கும் அறத்துக்குமுள்ள இடத்தை அறிமுகப்படுத்துகிற இது தமிழில் இவ்வகைமையில் வெளியாகும் முதல் நூலாகும். இது ஒரு கோட்பாட்டு நூல் அல்ல. மாறாக மாற்றுத்திறனாளி அல்லாத பொதுமக்களை நோக்கி எளிமையாக உரையாட முயலும் வெகுஜன நூலாகும். மற்றமையைப் புரிந்து கொள்ளுதல் என்பதே சிந்தனை மரபின் முக்கிய நோக்கம். மற்றமையாக தம்மை மாற்றிக் கொள்ளுதலே ஒரு உன்னதமான ஆன்மீகப் பயிற்சி. நவீன உலகில் மாற்றுத்திறனாளிகளே முதன்மையான மற்றமை என்பதால் இது பொதுமக்கள் ஒவ்வொருவரும் படித்திருக்க வேண்டிய, தம் வீட்டில் வைத்திருக்க வேண்டிய நூலாகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.